பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதம் முதல் நாளுக்கு நாள் உயர்ந்தது. வெறும்10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது. இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால், விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணை நிறுவனங்கள் இந்த மாத தொடக்கத்திலிருந்தே தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து ரூ.78.40 ஆகவும், டீசல் விலை 10 காசுகள் குறைக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.71.12 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…
சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல்…
சென்னை : ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரவியாக நடிகராக அறிமுகமாகி ஜெயம் ரவி என்ற பெயரை பெற்று கொண்டு இதனை…