தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்!கடும் எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதில் ,இன்று முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. மே 29ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த போதும் வெயிலின் தாக்கம் அதிக அளவு காணப்பட்டது. சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்தது. நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியதாகவும் அடுத்த சில தினங்களுக்கு இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொளுத்தும் கோடை வெப்பத்தில் இருந்து ஜூன் மாதம் இரண்டாவது வாரம் முதல் விடுதலை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் மழைக்காலம் தொடங்கியதாலும் வட மாநிலங்களில் புயல் மழை போன்றவை ஏற்பட்டதாலும் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு வெப்பம் படிப்படியாக தணியும் என்று வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.