இரவு நேர கைதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது; இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பந்தமாக போலீசார் வீட்டின் கதவை உடைத்து மிரட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 ம் தேதி ஸ்டெர்லைட் க்கு எதிராக நடந்த போரட்டத்தின் போது வன்முறை வெடித்தது.அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர் இதன் தொடர்ச்சியாக போலீசார் பொதுமக்களை மிரட்டும் விதமாக ஒவ்வொருவர் வீட்டிற்க்கு இரவு நேரங்களில் சென்று வீட்டின் கதவை உடைத்து மிரட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி சிப்கார்ட்,புதுக்கோட்டை,தென்பாகம் ,வடபாகம் ,மத்தியபாகம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதுவரை 234 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அண்ணாநகர் பகுதிக்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து 23 பேரை கைதுசெய்துள்ளனர் .இதனால் அச்சம் அடைந்த மக்கள் அங்குள்ள கோவில் திடலில் ஒன்றுதிரண்டு காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் மாநகர செயலாளர் தா.ராஜா தெரிவிக்கையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து அது சம்பந்தப்பட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் ஏறிகுதித்து இளைஞர்களையும் பெண்களையும் அச்சிறுத்தும் வகையயில் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிரார்கள் இது மிகவும் கண்டிக்கத்தக்கது முறையான அனுமதி பெற்று பகல் நேரங்கில் குற்றவாளி இவர்தான் என அடையாளம் கண்டு கைது செய்யட்டும் என்று கூறினார் .
டெல்லி : பல ஆண்டுகளாக, ஜாகுவார் நிறுவனம் பல்வேறு வகையான வாகனங்களை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. வருகின்ற 2026…
கோவை : சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி…
லக்னோ : இன்று மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவும் இன்று…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…
பெர்த் : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி விட்டனர். மேலும், சபரிமலை…