தொடரும் இரவு நேர கைது.! தனியாத பதற்றம்..!மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்…!

Default Image

இரவு நேர கைதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது; இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பந்தமாக போலீசார் வீட்டின் கதவை உடைத்து மிரட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 ம் தேதி ஸ்டெர்லைட் க்கு எதிராக நடந்த போரட்டத்தின் போது வன்முறை வெடித்தது.அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர் இதன் தொடர்ச்சியாக போலீசார் பொதுமக்களை மிரட்டும் விதமாக ஒவ்வொருவர் வீட்டிற்க்கு இரவு நேரங்களில் சென்று வீட்டின் கதவை உடைத்து மிரட்டி வருகின்றனர்.Image result for thoothukudi

இது தொடர்பாக தூத்துக்குடி சிப்கார்ட்,புதுக்கோட்டை,தென்பாகம் ,வடபாகம் ,மத்தியபாகம் ஆகிய காவல் நிலையங்களில்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதுவரை 234 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அண்ணாநகர் பகுதிக்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து 23  பேரை கைதுசெய்துள்ளனர் .இதனால் அச்சம் அடைந்த மக்கள் அங்குள்ள கோவில் திடலில் ஒன்றுதிரண்டு காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் மாநகர செயலாளர் தா.ராஜா தெரிவிக்கையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து அது சம்பந்தப்பட்ட கிராமங்களில்  இரவு நேரங்களில் வீடுகளுக்குள் ஏறிகுதித்து இளைஞர்களையும் பெண்களையும் அச்சிறுத்தும் வகையயில் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிரார்கள் இது மிகவும் கண்டிக்கத்தக்கது முறையான அனுமதி பெற்று பகல் நேரங்கில் குற்றவாளி இவர்தான் என அடையாளம் கண்டு கைது செய்யட்டும்   என்று கூறினார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்