தொடரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விவகாரம்-பணம் கொடுக்காததால் மோதல்….!
ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு டோக்கனுக்கு பணம் வழங்கவில்லை என மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்.கே,நகர் தேர்தலுக்கு முன்னர் ரூ.20 கொடுத்து “அதனை டோக்கனாக வைத்துக்கொள்ளுங்கள் பிறகு அதற்கான பணத்தை பட்டுவாடா செய்கிறோம்” என்று தினகரன் சார்பில் கூறியதாக புகார்கள் எழுந்தது. அதன் பின் தற்போது தேர்தல் நடந்து முடிந்து அதில், தினகரன் வெற்றியும் அடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஆர்.கே.நகரில் உள்ள மீனாம்பாள் நகரில், டோக்கனுக்கு பணம் வழங்குமாறு அங்குள்ள மக்கள் டோக்கன் வழங்கிய 6 பேரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து விவரம் அறிந்த போலீசார் அங்கு வருகை தந்து விசாரணையினை மேற்கொண்டனர். பின்பு தாக்குதலுக்கு ஆளான கார்த்திகேயன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இதில் ஈடுபட்ட இருவரினை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.