தை பொங்கலுக்கு விடுமுறை கிடையாது..! மாணவர்கள் பள்ளி வர வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

- பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது
- மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்து அதற்கான விடுமுறையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.இந்நிலையில் மீண்டும் பள்ளியானது ஜன.,3ல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஒரு உத்தர விட்டுள்ளது அந்த உத்தரவில் ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் டெல்லியில் ஜனவரி 16ம் தேதி மாணவர்களிடையே பிரதமர் மோடி உரையாடும் நிகழ்வை, 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்து உள்ளது.அதன் படி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தின் மூலம் மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பப்படுகிறது. இதனால் அன்று 9-12 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025