தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை போலீஸ் தடுத்து நிறுத்தியது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

Default Image

தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில்  ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அச்சங்க தலைவர் விஷால் மீது குற்றம் சாட்டினர்.இந்த முறைகேடுகள் தொடர்பாக விஷால் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி, சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் பூட்டு போட்டு விட்டு சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நடிகர் விஷால் வந்தார்.விஷால் மீது குற்றச்சாட்டுகள் கூறி, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் பூட்டு போடப்பட்ட நிலையில், பூட்டை அகற்ற விஷால் முயற்சி செய்தார் .
இதனால் அலுவலக வாசலில் நிற்கும் போலீசாருடன் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றபோது காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில் விஷால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிர்தரப்பினரால் போடப்பட்ட பூட்டை பதிவுத்துறை அதிகாரிகள் திறந்தனர்.
இதன் பின் விஷால் மீது 2 பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.சட்ட விரோதமாக கூடுதல் மற்றும் பிரச்சினைக்குரிய சொத்துக்கள் குறித்து தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதன் பின்னர் கைது செய்யப்பட்ட அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதன் பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வட்டாட்சியர் சீல்வைத்தார்.வட்டாட்சியர் கூறுகையில், இருதரப்பும் சமாதானம் ஆன பிறகே அலுவலகம் திறக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சகட்ட மோதலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்தார்.
Image result for விஷால் கைது

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது சட்ட விரோதமாக நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து விஷால் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.மனுவாக தாக்கல் செய்தால் மதியம் விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி விசாரித்த உயர்நீதிமன்றம் சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.அதேபோல்  தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை போலீஸ் தடுத்து நிறுத்தியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது.
மேலும் அனைத்து உறுப்பினர்களும் சங்கத்திற்குள் நுழைய அனுமதி உள்ளது. ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்