தேர்தல் பணிக்காக சென்ற துணை மாவட்ட ஆட்சியர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை
- தேர்தல் பணிக்காக சென்ற துணை மாவட்ட ஆட்சியர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை நடத்தியுள்ளனர்.
சென்னை கொளத்தூரில் மாவட்ட துணை ஆட்சியர் அல்லி தேர்தல் பணிக்காக வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் பூட்டை உடைத்து, கொள்ளையர்கள் 100 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும், ரூ.2 லட்சம் பணத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து, அப்பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்த வருகின்றனர். அல்லி வேலூர் மாவட்டத்தில் சிறப்பு துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.