தேர்தல் பஞ்சாயத்துகள்-வாக்கு எண்ணும் மையத்திற்குள் புகுந்த பாம்பு..!!அதிகாரிகள் ஷாக்
- வாக்கு எண்ணும் மையத்திற்குள் புகுந்த பாம்பு
- அதிகாரிகள் ஷாக்..பாம்பு புகுந்ததா.? அல்லது புகுத்தப்பட்டதா..? என்று மக்கள் சந்தேகம்.
தமிழகத்தில் மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது 2 கட்டங்களாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.இந்நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கும் எண்ணும் பணியானது காலையிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 5090 ஒன்றிய உறுப்பினர்களில் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிகள் 926 இடங்களையும்,எதிர்கட்சியான தி.மு.க மற்றும் அதன் கூட்டணிகள் 1078 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.இரவிலும் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் பாம்பு புகுந்து பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவிடைமருதூரில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் பாம்பு புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டது வாக்கு எண்ணிக்கொண்டிருந்த அதிகாரிகள் திடீரென பாம்பு புகுந்ததால் அதிர்ச்சியாகினார் இதனால் சற்று சலசலப்பு மையத்திற்குள் ஏற்பட்டது. பாம்பை விறட்டிய பின்னர் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.