தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!
ஈரோட்டை சேர்ந்த சதீஷ் என்பவர் தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை, தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வந்தது. இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்திருந்தனர்.
இதில் மொத்தம் 39 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீவிரமான மீட்பு பணிகளுக்கு பிறகு 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டார். 9 பேர் மரணம் அடைந்தனர். மீதமுள்ளவர்கள் காயமடைந்த நபர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயரந்து இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.