தேனி அருகே மதுவால் பெற்ற தந்தையை சுட்டுக்கொன்ற காவலர்!

Default Image

ஆயுதப்படை பிரிவு காவலர் ஒருவர், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  தன்னை பெற்ற தந்தை என்றும் பாராமல், சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட அந்த காவலரிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் பிரபு, தேனி ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். திங்கட்கிழமை அன்று, லோயர் கேம்பிற்கு வந்து சென்ற நீதிபதி ஒருவரின் பாதுகாப்பு பணிக்கு எஸ்எல்ஆர் துப்பாக்கியுடன் சென்ற விக்னேஷ் பிரபு, பணி முடிந்து, செவ்வாய்க்கிழமை காலையில், தேனி உள்ள ஆயுதப்படை அலுவலகத்திற்கு வந்துள்ளார். பின்னர், வடுகப்பட்டியில் உள்ள வீட்டிற்கு ஓய்விற்காக சென்றார்.

மதுபோதையில் வீட்டிற்கு வந்த விக்னேஷ் பிரபுவை, ஜவுளி கடையில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்த, 65 வயதான அவரது தந்தை செல்வராஜ், கண்டித்துள்ளார். போதையால், குடும்பத்திற்கான வருமானம் முற்றாக பாதிக்கப்படுகிறதே என்று ஆற்றாமையுடன், தனது மகனை அந்த அப்பாவி தந்தை கண்டித்துள்ளார்.  இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற காவலர் விக்னேஷ் பிரபு,  தந்தை என்றும் பாராமல், தான் வைத்திருந்த எஸ்எல்ஆர் என்ற துப்பாக்கி மூலம் சுட்டுக்கொன்றார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், வடுகப்பட்டிக்கு வந்த தென்கரை காவல்நிலைய போலீசார், கொல்லப்பட்ட தந்தையின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். விசாரணைக்கு பின், காவலர் விக்னேஷ் பிரபு ஒரு துப்பாக்கி மட்டுமே வைத்திருந்ததாக கூறி, அது பறிமுதல் செய்யப்பட்டது. காவலர் விக்னேஷ் பிரபுவும் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, குடிப்பழக்கம் உள்ள ஒரு காவலரிடம், அதுவும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளதாக புகார்கள் உள்ள ஒரு காவலரிடம், சுதந்திரமாக எடுத்துச் செல்ல துப்பாக்கியை வழங்கியது யார் என, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அதிரடி விசாரணையில் இறங்கினார். அப்போது, விக்னேஷ் பிரபுவிடம், மேலும், இரண்டு துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது. அவரது உத்தரவின்பேரில், அந்த இரண்டு துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆயுதப்படை அலுவலகத்திற்கு வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், அங்குள்ள அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். தந்தை என்றும் பாராமல் மதுபோதையில் சுட்டுக்கொலை செய்த விக்னேஷ் பிரபுவிடம், துப்பாக்கிகளை வழங்கி ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி எஸ்.பி பாஸ்கரன் உறுதியளித்திருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்