இன்று மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து மாணவி கல்பனா தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.இவர் இயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கும் 160 உயிரியல்,விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
மேலும் ஓசி பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6 -ஆம் தேதி நடைபெற்றது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இந்தத் தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்.
தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் மே 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டன. மேலும் அந்தப் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை தெரிவிக்கும்படியும் அறிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…