தென்மேற்கு பருவ மழை எதிரொலி! குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தென்மேற்கு பருவ மழை நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் தொடங்கியுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழையோடு கூடிய பலத்த காற்றும் வீசியது. குற்றால வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மழை சற்று ஓய்ந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோடை விடுமுறை என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மக்கள் அருவிகளில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.