இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,அந்தமானின் சில பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மே 23-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் 29-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலம் கணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 13 ஆண்டுகளில் கூடியவரை சரியாகவே கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மட்டும் தவறியுள்ளது.
தமிழகத்தில் கனமழை:
தெற்கு இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வரும் 21-ம் தேதி மத்திய அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவை காரணமாகவும் வெப்பச் சலனம் காரணமாகவும் மே 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.