தென்மேற்கு பருவமழை தென்தமிழக பகுதிகளில் தொடங்கியது!சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளதில் ,தென்தமிழகம் மற்றும் அதைஒட்டியுள்ள பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வடகேரளா மற்றும் கர்நாடக கடல் பகுதிகளில் நிலை கொண்டு உள்ளது.
இதேபோல் மத்திய கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
மேலும், கேரள பகுதிகளில் நேற்று வீசத் தொடங்கிய தென்மேற்கு பருவகாற்று தென் தமிழகத்தில் வீச தொடங்கியதால் தென் தமிழக பகுதிகளில் பருவ மழை துவங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 7சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.