தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , உண்மையை யாராலும் நிரந்தரமாக மறைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் தனியார் விடுதியில் தென்னிந்திய ஊடகக் கருத்தரங்கை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்திய ஜனநாயகத்தில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.
மக்களின் குரலாக இருந்து ஊடகங்கள் தங்களது பணிகளை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், தென்னிந்திய ஊடகங்கள் மக்களின் எண்ணங்களை எதிரொலித்துச் சிறப்பாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். தான் நாற்பதாண்டுக்காலம் பத்திரிகைத்துறையில் இருந்ததால் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தன்னால் உணர்ந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். சூரியனை மேகங்கள் மறைத்தாலும் நிரந்தரமாக மூடிவிட முடியாது என்றும், அதுபோல உண்மையையும் யாரும் மறைக்க முடியாது என்றும் ஆளுநர் பன்வாரிவாலால் புரோகித் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…