கோவில் உண்டியலை உடைத்துத் திருட்டு…!! சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்..!!! போலிசார் விசாரணை…!!!
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருடிய நபர்களை போலிசார் தேடிவருகின்றனர்.
பத்திரகாளியம்மன் கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு சுமார் 20 ஆயிரம் ரூபாய் திருடுபோனதாக கோவில் நிர்வாகத்தினர் போலிசில் புகார் அளித்தனர். இதன் பேரில் வந்த வடபாக போலிசார், கோவிலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு நபர்கள் உண்டியலை உடைக்கும் காட்சிகள் பதிவாகி நிலையில் அதனடிப்படையில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்