ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர், மாசுக்கட்டுப்பாடு அலுவலர், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பெரிய கூட்டத்தை எதிர்பாராத காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முற்பட்ட போது காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…
சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…