பாரத் ராஜா தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தை சேர்ந்தவர் . இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த கொலைவழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 12 ஆண்டுகளாக பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி தனது அண்ணன் திருமணத்திற்காக தூத்துக்குடிக்கு பரோலில் வந்து உள்ளார்.
கடந்த 22 ம் தேதி ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து 23 ம் தேதி தூத்துக்குடி அண்ணா நகரில் காவல்துறையினர் மீது கல்வீச்சு நடந்தது.
இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காக பல்வேறு வீடுகளில் காவல்துறையினர் உள்ளே புகுந்து அங்கிருந்த ஆண்களை கைது செய்தனர். அப்போது அண்ணா நகர் 12 வது தெருவில் தனது அண்ணன் வீட்டில் இருந்த பரோல் கைதி பாரத் ராஜாவையும் காவல்துறையினர் பலமாக தாக்கி அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது.
காவல்நிலையத்தில் இரண்டு நாட்கள் வைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதி பாரத்ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைத்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 30 ம்தேதி பாரத்ராஜா,சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
நன்னடத்தைக்காக சிறையில் இருந்து வெளியே வர இருந்த நிலையில் ஆயுள் கைதி பாரத்ராஜா காவல்துறையினரால் தாக்கப்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனதாகவும், அதனை மறைத்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் நாடகம் ஆடுவதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஆயுள் தண்டனை கைதி பாரத்ராஜாவின் மரணத்தில் சர்ச்சை நீடிப்பதால் அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…