ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டதாக 65 பேரின் ஜாமீனை தள்ளுபடி செய்யக்கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22 ஆம் தேதி நடந்த போராட்டம் வன்முறையானதை தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 65 பேரையும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி சொந்த ஜாமீனில் விடுதலை செய்திருந்தார். அரசு தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் 65 பேருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டதால் அதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டதாக 65 பேரின் ஜாமீனை தள்ளுபடி செய்யக்கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.65 பேர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரத்தை காவல்துறை சமர்பிக்க தவறியதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ள 65 பேரின் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் சாஜி வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…