தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைத்திக்குழு கூட்டம் தொடங்கியது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ககன்தீப் சிங், டேவிதார் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தென் மண்டல ஐ.ஜி. பங்கேற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவும் இதில் பங்கேற்றுள்ளார். மக்கள் பிரதிநிதிகளாக தூத்துக்குடி நகர முக்கிய பிரமுகர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் தூத்துக்குடி தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள், பாதிரியார்கள் உள்பட 40 பேர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…