தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 16 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு சென்றன..!
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 22ம் தேதி முதல் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், 16 நாட்களுக்குப் பின்னர் இன்று அவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஸ்புரம், வெள்ளப்பட்டி, தருவைகுளம், வைப்பாறு, வேம்பார், புன்னக்காயல், பெரியதாழை, வீரபாண்டியபட்டினம் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் இன்று காலை கடலுக்குச் சென்றன. இதன் மூலம், சுமார் 20 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.