தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில்..!! சுங்கக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டது..!!
உயர்நீதிமன்ற உத்தரவை மீறித் தூத்துக்குடி அருகே முழுக்கட்டணம் பெற்ற சுங்கச்சாவடியை லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கான் என்கிற நிறுவனம் புதூர் பாண்டியாபுரம், எலியார்பத்தி ஆகிய 2 இடங்களில் சுங்கச் சாவடி அமைத்து அவ்வழியாகச் செல்லும் வாகனங்களுக்குக் கட்டணம் பெற்று வருகிறது.
இந்தச் சாலையை முறையாகப் பராமரிக்கவில்லை எனப் புகார் வந்ததால் மதுக்கான் நிறுவனத்துக்குத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நூறு கோடி ரூபாய் தண்டம் விதித்தது. இதனிடையே நெடுஞ்சாலையைச் சரியாகப் பராமரிக்காவிட்டால் பாதிக்கட்டணம்தான் பெற வேண்டும் எனத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இதை மீறித் தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு முழுக் கட்டணம் பெற்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் சுங்கக் கட்டணத்தை மீண்டும் பாதியாகக் குறைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்