தூத்துக்குடி மக்களே ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு விழா எடுப்பார்கள்!நாஞ்சில் சம்பத்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர் வைகோ என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.