ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது.
வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளில் மொத்தம் 197 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களில் 173 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கலில் ரகுமான், முகமது யூசுப், முகமது இசரத், வேல்முருகன், சோட்டையன், சரவணன் ஆகிய 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
கலவர வழக்குகள் தொடர்பாக நேற்று அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ், நாம்தமிழர் கட்சி நிர்வாகி இசக்கிதுரை உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தார்கள். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் கல் வீசியதாக தூத்துக்குடி 3ம் மைல் பகுதியை சேர்ந்த அக்பர் (வயது 47) என்பவரை சிப்காட் போலீசாரும், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் (29), சிலுவைபட்டியை சேர்ந்த சுரேஷ் (29) ஆகியோரை வடபாகம் போலீசாரும் கைது செய்தனர்.
மேலும் 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்தார்கள். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. போலீசாரின் கைது நடவடிக்கை காரணமாக தூத்துக்குடியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
பருவகாலங்களில் வரும் பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் முறை உள்ளிட்டவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
சிறகடிக்க ஆசை தொடரின் ஹீரோவான வெற்றி வசந்த் மற்றும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும் நாளை திருமணம் நடைபெறுகிறது. சென்னை…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால்…