தூத்துக்குடி போராட்டம்:65 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மனு!
தமிழக அரசு தூத்துக்குடி போராட்டம் தொடர்பான வழக்கில் 65 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் தொடர்பாக 65 பேரைக் கைது செய்த காவல்துறையினர், மாவட்ட முதன்மை நீதிபதி சாருஹாசினி முன்பாக ஆஜர்படுத்தினார். அந்த, 65 பேரையும் சொந்த ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், 65 பேருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து அவர்களைக் கைது செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஜாமீன் வழங்கப்பட்ட போது, அரசு தரப்பில் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் முறையிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 65 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.