தூத்துக்குடியில் கடந்த 22ம்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றமான நிலை நிலவியது. நெல்லை, குமரி, மதுரை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். இன்னும் தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் 3 வித வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படைகளில் குமரி உள்ளிட்ட வெளி மாவட்ட போலீசாரும் உள்ளனர். இந்த பணிகளுக்காக குமரி மாவட்டத்தில் இருந்து இன்னும் 100க்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடியில் உள்ளனர்.
இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்களும் தூத்துக்குடியில் முகாமிட்டு இருப்பதால், குமரி மாவட்ட காவல் நிலையங்களில் போலீசாருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரோந்து பணி மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணிக்கு கூட ஆட்கள் இல்லை. போதிய டிராபிக் போலீசார் இல்லாததால் நெருக்கடி அதிகரித்த வண்ணம் உள்ளன. ஊர்க்காவல் படையும், ஆயுதப்படை போலீசாரும் தான் முக்கிய சந்திப்புகளில் நின்று போக்குவரத்தை சீரமைக்கிறார்கள். அவர்களும் போதிய அனுபவம் இல்லாதவர்களாக இருப்பதால் நெருக்கடி நேரங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றனர் .
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…