தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி வன்முறை ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் முழுப் பின்னணி விவரங்களை விரிவாக விசாரித்து தொடர்புடைய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதோடு, விசாரணையை 4 மாத காலத்துக்குள் சிபிஐ முடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 20 அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது, கொலை மிரட்டல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் இன்று துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த இன்ஸ் பெக்டர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…