ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து ரூ.750 கோடி இழப்பீடு வசூலிக்க கோரியது பற்றி 2 வாரத்தில் பதில் தேவை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் ரூ.750 கோடி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் சிவகங்கையை சேர்ந்த விஜய் நிவாஸ் பொதுநல மனு தாக்கல் செய்தார்.துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு வேதாந்தா தலா ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய வேதாந்தா நிறுவனம் ரூ.620 கோடி வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற கிளையில் சிவகங்கையை சேர்ந்த விஜய் நிவாஸ் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து ரூ.750 கோடி இழப்பீடு வசூலிக்க கோரியது பற்றி 2 வாரத்தில் பதில் தேவை.மேலும் வேதாந்தா நிறுவன அதிபர் அனில் அகர்வால், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
DINASUVADU
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…