தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:ஸ்டெர்லைட் ஆலை ரூ.750,00,00,000 கோடி இழப்பீடு…! உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதாந்தாவிற்கு அதிரடி நோட்டீஸ் …!

Default Image

ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து ரூ.750 கோடி இழப்பீடு வசூலிக்க கோரியது பற்றி 2 வாரத்தில் பதில் தேவை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Image result for sterlite protest
கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர்.
Image result for sterlite protest
முன்னதாக கடந்த ஜூன் மாதம்  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் ரூ.750 கோடி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் சிவகங்கையை சேர்ந்த விஜய் நிவாஸ் பொதுநல மனு தாக்கல் செய்தார்.துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு வேதாந்தா தலா ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய வேதாந்தா நிறுவனம் ரூ.620 கோடி வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற கிளையில் சிவகங்கையை சேர்ந்த விஜய் நிவாஸ் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
Image result for high court bench madurai
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து ரூ.750 கோடி இழப்பீடு வசூலிக்க கோரியது பற்றி 2 வாரத்தில் பதில் தேவை.மேலும்  வேதாந்தா நிறுவன அதிபர் அனில் அகர்வால், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்