தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு:தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு அறிவுரை …!
உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான ஹரிராகவன் என்பவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்தது
இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான ஹரிராகவன் மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,ஜனநாயக நாடா? போலீஸ் நாடா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் நேற்று வழக்கில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.இதன் பின்னர் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று நேரில் ஆஜரானார்.
பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான ஹரிராகவன் என்பவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்தது.வழக்கு விசாரணையில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆஜரான பின்னர் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.மேலும் ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்ய வேண்டாம் என்று எச்சரித்தும் அனுப்பியது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.