துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் வரம்பை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.இவர் இருமுறை தூத்துக்குடிக்கு வந்து தனது விசாரணையை நடத்தினார்.பொதுமக்கள் ,அதிகாரிகள் மற்றும் பலரிடம் வாக்குமூலமும் பெற்றார்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் வரம்பை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு பின் நடந்த சம்பவங்கள் குறித்தும் அருணா ஜெகதீசன் விசாரிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 22 ஆம் தேதிக்கு பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
மேலும் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் மற்றும் புகார்களை வரும் 27ம் தேதி வரை அருணா ஜெகதீசன் ஆணையத்தில் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது தமிழக அரசு.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…