தூத்துக்குடி துப்பாக்கி சூடு:277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு! 150 குடும்பம் ஆபத்தான நிலை! தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் இன்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதில் கூறியதாவது:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை.தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.ஸ்டெர்லைட் குடியிருப்பில் 150 குடும்பத்தினருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதில் மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.