தூத்துக்குடி துப்பாக்கி சூடு:மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விசாரணை நடத்தப்பட்டது.
நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினரிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய துணைத்தலைவர் முருகன் முன்னிலையில் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர்.
இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறுகையில்,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஆட்சியர், காவல் துறையினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இது குறித்த விசாரணை அறிக்கை குடியரசு தலைவரிடம் அளிக்கப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் லலிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.