தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ட்விட்டர் வாயிலாகதிரைத்துறையினர் பலரும் கண்டனம்..!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு திரைத்துறையினர் பலரும் தங்களது கண்டனங்களையும் , உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செய்தியையும் ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன்:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன்..அன்பை போதித்த மண்ணில் இழக்கும் ஒவ்வொரு உயிரும் மனதை மிகவும் பாதிக்கிறது.
தனுஷ்:
ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.தண்டிக்கப்பட வேண்டும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
சதீஷ்( நகைச்சுவை நடிகர்) :
இன்னொரு ஜாலியன் வாலாபாக். அவர்களாவது தன்நாட்டிற்காக இன்னொரு நாட்டினரை சுட்டார்கள் ஆனால் இங்கு இன்னொரு நாட்டுக்காரனுக்காக நம் நாட்டினரை சுட்டிருக்கிறார்கள்.
அதுல்யா (நடிகை) :
அற வழியில் போராடும் மக்களை சுட்டுக்கொன்றதை வன்மையாக கண்டிக்கிறோம்.இறந்த எம் தமிழின போராளிகளுக்கு நிவாரணம் தேவையில்லை தேவை நிரந்தர தீர்வு விழித்து கொள் தமிழினமே
கௌதமி (நடிகை):
தங்களுடைய சுற்றுச்சூழலையும், உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையையும் காப்பாற்றிக்கொள்வதற்காக அமைதியாகவும், ஜனநாயக முறையிலும் போராடிய குடிமக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நம்மைக் காக்க வேண்டிய அரசே இந்த வேலையைச் செய்திருக்கிறது. இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். போராட்டக்காரர்கள் பக்கம் நின்று, அவர்களுக்கு என்னுடைய ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்டண்ட் சில்வா:
மறுபடியும் போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஓர் உயிரிழப்பு , தூத்துக்குடி முழுக்க மரண ஓலம் ,தாங்க முடியவில்லை இறைவா
நவீன்(இயக்குநர்) :
இவ்வளவு ஈவிறக்கமற்ற கொடூரமான ஆதிக்கவெறி கொண்ட படுகொலைகள் நடத்தபட்டுள்ள நிலையிலும் ஒரு பூஷ்வா கூட்டம் ‘இது ஃப்ரிஞ் எலமெண்ட்ஸ் சதி, அரசியல் ஆதாயத்திற்காக நடந்த தவறு, மாவோயிஸ்டுகள் சூழ்ச்சி, காவல்துறை தன் கடமையை செய்தது என்று மனிதமின்றி பேசுகிறது. சுட்டுக்கொன்ற அந்த அரக்கர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அவர்கள் கொன்று குவித்த அந்த உன்னத உயிர்கள் போராடியது அவர்களுக்கும் சேர்த்துதான். அதிகாரவர்கத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து வெகுண்டால் அது அஹிம்சை மீறல் என்று சொல்லும் நம்மவர்கள் உணர வேண்டியது ஒன்றுதான்… ‘ஒரு மனிதன் மீது நடத்தப்படும் வன்முறையை அமைதியாக அஹிம்சை முறையில் வேடிக்கை பார்ப்பதும் ஹிம்சையே’
ஜி.வி.பிரகாஷ்:
அற வழியிலும் சட்ட வழியிலும் போராடி வெற்றிபெறுவோம். தூத்துக்குடியில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன். மக்கள் சக்தியே மகத்தான சக்தி!
இவ்வாறு திரையுலாகினர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செய்தியையும் ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்