தூத்துக்குடி துப்பாக்கி சூடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் உட்பட 1720 பேர் மீது தென்பாகம் போலீசா வழக்கு பதிவு!
தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதரம்பரநகர் பஸ் நிறுத்தம் பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தாகாரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக இந்த பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி போலீசார் அனுமதி மறுத்ததால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் உத்தரவின்பேரில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் 1720க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாகவும், விதிமுறைகளை மீறி கூட்டம் இரவு 10 மணி வரை கூட்டம் நடந்ததாகவும் டவுண் டிஎஸ்பி பிரசாத் அளித்த புகாரின் பேரில் சிபிஎம் மாவட்ட செயலளார் அர்ஜூன், பிருந்தா காரத் உள்ளிட்ட 1720 பேர் மீது தென்பாகம் போலீசார் 188 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.