தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு :உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு வேதாந்தா தலா ரூ.10 கோடி! பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய ரூ.620 கோடி வழங்கக்கோரி வழக்கு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் ரூ.750 கோடி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் சிவகங்கையை சேர்ந்த விஜய் நிவாஸ் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு வேதாந்தா தலா ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய வேதாந்தா நிறுவனம் ரூ.620 கோடி வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற கிளையில் சிவகங்கையை சேர்ந்த விஜய் நிவாஸ் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.