தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான அந்தோணி செல்வராஜ் வீட்டிற்கு நேரில் சென்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத் ஆறுதல்!

Default Image

கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Image may contain: 4 people

இதன் தொடர்ச்சியாக காவல்துறை இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து அத்துமீறி ஆண்கள், இளைஞர்கள்,பெண்கள் என அனைவரையும் கைது செய்து வந்தது.

எனவே துப்பாக்கி சூட்டை கண்டித்தும் துப்பாக்கி சூடை நடத்திய அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பேரணியும்,பொதுக்கூட்டமும் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரினர்.ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் ஆகஸ்ட் மாதம் வரை எந்த ஒரு அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி மனித உரிமை மீறலை கண்டித்தும் பேரணி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரியும் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர செயலாளர் தா.ராஜா தலைமையில் நடைபெறுகிறது.இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினறும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினறுமான பிருந்தாகாரத் சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன்,புறநகர் செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை ஆகியோர் வகிக்கின்றனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்.கே.பாலகிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ .வாசுகி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் உரையாற்றுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜூனன் வரவேற்புரை மற்றும் நன்றியுரையாற்றுகிறார்.

Image may contain: 8 people, crowd and outdoor

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து பொதுக்கூட்டம் இன்று நடைபெரும் நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினறும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினறுமான பிருந்தாகாரத் தூத்துக்குடி வந்தடைந்தார்.

பின்னர் பிருந்தாகாரத் தூத்துக்குடி வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மடத்தூர்,பண்டாரம்பட்டி,குமார ரெட்டியாபுரம் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.பின்னர் துப்பாக்கி சூட்டில் பலியான அந்தோணி செல்வராஜ்  வீட்டில் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

Image may contain: 1 person, sitting and indoor

 

பிருந்தாகாரத்வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ .வாசுகி,மத்திய குழு உறுப்பினர் பி சம்பத்,மாநில குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜூனன் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்