சி.பி.சி.ஐ.டி., போலீசார் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு வழக்கை தூத்துக்குடி போலீசார் விசாரித்து வழந்தனர். இந்நிலையில் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் நேரடி மேற்பார்வையில் நெல்லை சி.பி.சி.ஐ.டி துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் இன்ற தொடங்கினர்.
இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்றே தூத்துக்குடி விரைந்தனர். தூத்துக்குடியில் இதற்காக பிரத்யேக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்கு விபரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலமாக பெற்றனர்.
துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கினை பதிவு செய்த போலீஸ் அதிகாரி, அதன் விசாரணை அதிகாரி, புகார் கொடுத்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதிகொடுத்த அதிகாரிகள், துப்பாக்கி சூட்டின் போது பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் ஆகிய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…