தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எதிர்மனுதாரராக 3 துணை தாசில்தார்களை சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எதிர்மனுதாரராக 3 துணை தாசில்தார்களை சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கண்ணன்,சந்திரன்,சேகர் ஆகிய 3 தாசில்தார்களையும் வழக்கில் சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கண்ணன்,சந்திரன்,சேகர் ஆகிய 3 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.