தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் எஞ்சியுள்ள 6 பேரின் உடல்களுக்கு நாளையே உடற்கூறு ஆய்வு நடக்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். உடற்கூறு ஆய்வு முடிந்தவுடன் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு, வன்முறை சம்பவங்களில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் நீதிபதிகள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 7 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் எஞ்சியுள்ள 6 பேரின் உடல்களை பிரேதப்பரிசோதனை செய்ய உத்தர விட்டுள்ளது. பிரேதப்பரிசோதனை செய்து உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது
ஏற்கனவே 7 பேரின் உடல்கள் மறு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…