தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு:ஐ.நா. கடும் வேதனை!
ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் எரிக் சோல்ஹைம்,சுற்றுச்சூழலுக்காக போராடிய மக்கள் மீது தமிழக அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த போட்டியில் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் எரிக் சோல்ஹைம் கூறுகையில்,
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். சுற்றுச்சூழலை காக்க போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயல வேண்டும் என்றார் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் எரிக் சோல்ஹைம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.