தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர்.தேசிய மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. பபூல் தத்தா பிரசாத் விசாரணை நடத்தி வருகிறார்.
முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்ட 3 பேர் உள்பட 10 அரசு அதிகாரிகளிடம் நேற்று விசாரணை சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று 10 பேரிடம் விசாரணை செய்தது.
முன்னதாக நேற்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் 8 பேரின் குடும்பத்தினரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.
அவர்களிடம் விசாரிப்பதற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் புபுல் புட்டா பிரசாத் தலைமையிலான 5 பேர் குழுவினர், தூத்துக்குடிக்கு வந்தனர். தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.
துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழரசன், சண்முகம், கந்தையா, கார்த்திக், செல்வசேகர், ரஞ்சித்குமார் காளியப்பன், ஜான்சிராணி ஆகிய 8 பேரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி, சந்தேககங்கள் கேட்டறிந்து வாக்குமூலம் பெற்றனர்.
முன்னதாக, தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர், தம்மிடம் உள்ள ஆவணங்களை தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகளிடம் தாக்கல் செய்தார்.
இதனிடையே தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழுவில் இடம்பெற்றுள்ள 2 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவருவோரைச் சந்தித்து, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த குழுவினர் வரும் 7ஆம் தேதி வரை தூத்துக்குடியில் விசாரணை மேற்கொள்வார்கள் என்றும், அதன்பிறகு, தேசிய மனித உரிமை ஆணையத்தில் அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.