13 பொதுமக்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானது துரதிர்ஸ்டவசமானது என இன்று வழக்கின் இடையே தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியாகி பாதுகாக்கபடும் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்யும் குழுவில் தங்கள் தரப்பில் பரிந்துரைக்கும் மருத்துவரை சேர்க்க வேண்டும் என வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்ட்டன், பார்வேந்தன், பாவேந்தன், நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நாளை மறுதினம் விசாரணைக்கு வரவுள்ளது.