தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை நிறைவு!

Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்தது.விசாரணை நிறைவடைந்ததை அடுத்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் சென்னை திரும்புகின்றனர்.

முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து மாநில மனித உரிமை ஆணைய தலைவரிடம் ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தூத்துக்குடியில் ஆய்வு செய்த பின் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் பேட்டியளித்துள்ளார்.

மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் இன்று தூத்துக்குடி சென்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடந்த பகுதிகளில் ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

போராட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடமும் விசாரணை நடைபெற்றது.

தூத்துக்குடியில் கலவரம் நடந்த ஆட்சியர் அலுவலக பகுதிகளில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நாளை தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு விசாரணை செய்கின்றது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு மக்களிடம் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு விசாரணை நடைபெறவுள்ளது.

இதேபோல் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்