ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் தூத்துக்குடி வந்தனடைந்தனர்.முதுநிலை எஸ்.பி., தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு, நாளை விசாரணையை தொடங்குகிறது.தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு மக்களிடம் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு விசாரணை நடத்துகிறது.
முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த வழக்கில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க 4 பேர் குழுவை அமைத்து, 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மூத்த காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையிலான இந்த குழு தமிழகம் வந்துள்ளனர்.பின்னர் அவர்கள், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினரையும், தனிநபர் சாட்சிகளையும் நேரில் சந்தித்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…