துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து மாநில மனித உரிமை ஆணைய தலைவரிடம் ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தூத்துக்குடியில் ஆய்வு செய்த பின் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் பேட்டியளித்துள்ளார்.
முன்னதாக மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் இன்று தூத்துக்குடி சென்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடந்த பகுதிகளில் ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
போராட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடமும் விசாரணை நடைபெற்றது.
தூத்துக்குடியில் கலவரம் நடந்த ஆட்சியர் அலுவலக பகுதிகளில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நாளை தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு விசாரணை செய்கின்றது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு மக்களிடம் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு விசாரணை நடைபெறவுள்ளது.
இதேபோல் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…