கடந்த மே 30 ஆம் தேதி அகில இந்திய வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு விவரம்:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று ஏற்கனவே கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று கேட்டால், ஓய்வு பெற்ற விசாரணை அமைத்துள்ளதாக பதில் அளிக்கிறீர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பதில் ஏற்புடையது அல்ல என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது பற்றி வரும் 6 ஆம் தேதி பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முத்து அமுதநாதனும், வழக்கை 9 பேர் குழு விசாரிக்க கோரி கந்தகுமாரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த மே 30 ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதியக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு நேற்று அல்லது இன்று பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் கோரிய வழக்கில் உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டது .அகில இந்திய வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…