தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு அரசாணையின் பேரில் ஸ்டெர்லைட் ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மனித உரிமை, சுற்றுச்சூழலுக்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணையை காலதாமதமின்றி நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்….
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…