தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணைய குழு இன்று வருகை!
மனித உரிமைகள் ஆணைய குழு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த இன்று தமிழகம் வருகிறது.
இதுகுறித்த வழக்கில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க 4 பேர் குழுவை அமைத்து, 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மூத்த காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையிலான இந்த குழு இன்று தமிழகம் வருகிறது. இன்று மாலையே, தூத்துக்குடி செல்லும் அவர்கள், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினரையும், தனிநபர் சாட்சிகளையும் நேரில் சந்தித்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.